X

சிம்லாவில் உள்ள உணவகத்தில் வெடி விபத்து – ஒருவர் பலி

சிம்லாவின் மையப்பகுதியில் உள்ள மால் சாலையில் தீயணைப்புப் படை அலுவலகத்தை ஒட்டியுள்ள உணவகத்தில் நேற்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.

மால் சாலை கீழே உள்ள மிடில் பஜாரில் அமைந்துள்ள ஹிமாச்சலி ரசோய் என்கிற உணவு உண்ணும் இடத்தில் இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடி விபத்தால், நான்கு முதல் ஆறு கடைகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து பல மைல்களுக்கு சத்தம் கேட்டது. அந்த இடம் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ளதால், மீட்புப் பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டன.

சிலிண்டர் வெடித்துச் சிதறியிருக்கலாம் என சந்தேகிப்பதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். குண்டுவெடிப்புக்கு 20 நிமிடங்களுக்கு முன்பு எரிவாயு கசிவு ஏற்பட்டதாக புகார் அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: tamil news