சிம்பு 14 ஆண்டுகளுக்கு முன் இயக்கிய திரைப்படம் `வல்லவன்’. நயன்தாரா, ரீமா சென் நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பிரிந்தனர்.
இந்த படத்துக்கு பிறகு அவர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தும் சிம்பு அடுத்து இயக்கத்திலும் இறங்க இருக்கிறார். சிம்பு இயக்கும் படத்துக்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. இதில் சிம்புவுடன் சந்தானமும் இணைந்து நடிக்கிறார்.
சிம்பு தற்போது ஹன்சிகாவின் மஹா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.