சிம்புவின் மாற்றத்தால் திகைத்துப் போன நடிகர்
சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாநாடு. ஊரடங்கிற்கு முன்னர் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. ஊரடங்கிற்குப் பின்னர் இந்தப் படவேலைகள் அப்படியே நின்றது. இதனால் சுசீந்திரன் இயக்கத்தில் 30 நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார் சிம்பு.
தற்போது மீண்டும் மாநாடு படப்பிடிப்பில் கலந்துகொள்ள பாண்டிச்சேரி கிளம்பியிருக்கிறார் சிம்பு. நடிகர் படவா கோபி தற்போது மாநாடு படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே வெங்கட் பிரபுவின் சென்னை 28 படங்களில் நடித்திருக்கிறார்.
இது குறித்து பதிவிட்ட படவா கோபி “குழுவிற்கு நன்றி.. எங்கள் தம்பி சிலம்பரசனின் மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்து திகைத்துப் போனேன். மிகவும் உத்வேகமாக உள்ளது. அவர் தொடர்ந்து பலருக்கு ஊக்கமளிக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.