X

சிம்புக்கு வில்லனாகும் அரவிந்த்சாமி!

சிம்பு நடிப்பில் தற்போது ‘மஹா’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது. பின்னர் சமரசமாகி மாநாடு படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்தார். தற்போது இப்படத்தில் சிம்புக்கு வில்லனாக நடிக்க அரவிந்த் சாமியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.