X

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் காலியிறுதிக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் மான்பில்சை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் வாவ் ரிங்கா தோல்வி அடைந்தார். அவரை மேக்ஸ் பர்செல் (ஆஸ்திரேலியா) 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். அதே போல் நம்பர் ஒன் வீரர் அல்கராஸ் (ஸ்பெயின்), அட்ரியன் மன்னா ரினோ (பிரான்ஸ்), ஸ்வெ ரேவ் (ஜெர்மனி), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலாந்து), அலெக்சி பாபிரின் (ஆஸ்திரேலியா)ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக் (போலாந்து) 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜெங்கை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

Tags: tamil sports