X

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – ஜில் டீச் மேனிடம் நவோமி ஒசாகா தோல்வி

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை சுவிட்சர்லாந்தின் ஜில் டீச் மேன் 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

இந்த வெற்றி மூலம் அவர் கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அதேபோல் பெலிண்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து), கரோலினா, பிளிஸ்கோவா (செக் குடியரசு), பவுலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிட்சிபஸ் 5-7, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் சோரென்சோ கோனெகோவை (இத்தாலி) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், கஸ்பர் ரூட் நார்வே பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் (கனடா) ஆகியோர் கால் இறுதிக்கு தகுதிபெற்றனர்.