சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன் – நடிகர் சிம்பு

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ளார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.

ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவான இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘சித்தா’ திரைப்படத்தை பாராட்டி நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சித்தா மிகவும் உணர்திறன் மிக்க விஷயம், மிக இலகுவான முறையில் மிகவும் தெளிவுடன் கையாளப்பட்டுள்ளது. இயக்குனர் அருண் குமாருக்கு வாழ்த்துகள். சித்தார்த் இந்த திரைக்கதையை தேர்ந்தெடுத்து தயாரித்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema