X

சித்தார்த்தின் 40 வது படத்தை இயக்கும் ‘8 தோட்டக்கள்’ பட இயக்குநர்

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் படித்தவர் சித்தார்த். அதன் பிறகு மணி ரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். 180 படத்தின் மூலம் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.

அதன்பிறகு வெளியான காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4 போன்ற படங்கள் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் மூலம் தன்னை நிலநடுத்திக்கொண்டார் நடிகர் சித்தார்த்.

அதுமட்டுமில்லாமல் படங்களை தவிர்த்து சமூக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் சிக்கி வந்தார். இதனைத்தொடர்ந்து நடிகை அதிதி ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் சித்தார்த்தின் 40-வது படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சித்தார்த்தின் 40-வது படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்க இருப்பதாகவும், இந்த படம் உலகளாவிய ஈர்ப்பு கொண்ட கதையைக் கொண்டிருக்கும். எல்லோரது இதயங்களிலும் எதிரொலிக்கும் படமாக அமையும். இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.