சிண்ட்ரெல்லா படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் ராய் லட்சுமி
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் நீயா 2. இந்த படத்தில் இவருடன் ஜெய், வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்திருந்தனர்.
ஆனாலும் இந்த படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது ராய் லட்சுமி கதை நாயகியாக சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் கல்லூரி வினோத், சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தில் ராய் லட்சுமி மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும், இது தவிர மூன்றாவதாக நடிக்கும் வேடம் சஸ்பென்சாக வெளியிடப்படாமல் இருக்கிறது.