X

சிங்க குட்டிகளை வளர்க்கும் நபருக்கு கண்டனம் தெரிவித்த மக்கள்

சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகள் இயற்கையான அவற்றின் வாழ்விடங்களில் வாழக் கூடியவை. மிகவும் ஆபத்தான விலங்குகளாக கருதப்படும் அவைகளை செல்ல பிராணிகளாக வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டு சிங்கக் குட்டிகளை செல்ல பிராணியாக வளர்த்து வரும் நபர் குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்ட்ரகிராம் வளைதளத்தில் பகிரப்பட்டு வைரலானது. அந்த வீடியோவில் உள்ள நபர் அருகே கார் டிக்கியில் சிங்க குட்டிகள் அமர்ந்திருக்கின்றன. அப்போது அவர் தனது கைகளால் அந்த சிங்க குட்டிகளை செல்லமாக தடவிக் கொடுக்க முயலுகிறார்.

சில வினாடிகளில் ஒரு சிங்கக் குட்டி ஆக்ரோஷமாக சீறியவுடன் அவர் கையை எடுத்து விடுகிறார். இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்து விபரம் தெரியவில்லை. இதுவரை 2 லட்சத்து 74 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலர் இது ஆபத்தான செயல் என்றும், அந்த விலங்குகள் விளையாடும் பொம்மைகள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். சிலர் இது முட்டாள்தனம் என்றும், காட்டு விலங்குகள் மீதான துஷ்பிரயோகம் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.