X

சிங்கிளாக இருப்பது பிடித்திருக்கிறது – ராஷ்மிகா மந்தனா

கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

சமூக வலைதளங்களிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ராஷ்மிகா, அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். அந்தவகையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் ராஷ்மிகா. அப்போது ரசிகர் ஒருவர், யாரை காதலிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “நானும் சிங்கிள் தான். எனக்கு அது பிடித்திருக்கிறது. மேலும், சிங்கிளாக இருப்பது குறித்து வருத்தப்படுபவர்களுக்காக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நம்புங்கள், சிங்கிளாக இருப்பதை ரசிக்க தொடங்கிவிட்டால், உங்கள் காதலருக்கான மதிப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.