X

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் – முதல் சுற்றில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் கடாம்பி, லக்‌ஷயா சென் தோல்வி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், டென்மார்க்கின் விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார்.

இதில் லக்ஷயா சென் 13-21, 21-16, 13-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மற்றொரு வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார். இதில் கிடாம்பி 4-21 என முதல் செட்டை இழந்தார்.

2வது செட்டில் 3-11 என பின்தங்கியிருந்த நிலையில், காயம் காரணமாக விலகினார். இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறினார்.

சிங்கப்பூர் ஓபன் தொடரின் முதல் சுற்றிலேயே இந்திய வீரர்கள் 2 பேர் வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.