Tamilசெய்திகள்

சிங்கப்பூரின் அதிபராக தர்மன் சண்முகரத்னம் இன்று பதவி ஏற்பு

சிங்கப்பூரில் கடந்த 1-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, சிங்கப்பூரின் 9-வது அதிபராக அவர் இன்று பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதி மந்திரி, கல்வி மந்திரி, துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.