கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது இவரது நடிப்பில் ராஜபீமா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் ‘வா மணவாளா..’ என்ற ஆல்பம் சாங் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், ஆரவ் சிக்ஸ் பேக் தோற்றத்திற்கு மாறியிருக்கிறார். இதற்காக 6 ஆறுமாத காலமாக கடின உழைப்பையும், அர்ப்பணிப்பும் செய்திருக்கிறார். ஆரவ் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.