16வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 10ம் தேதி நடக்கிறது.
அன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறும் போட்டிக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் இன்று (8.5.2023) காலை 7 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்களுக்கு தனி வரிசையும், மாற்றுத்திறனாளர்களுக்குத் தனியாக ஒரு மணிநேரமும் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.