சிஎஸ்கே அணி முழுவதையும் மாற்ற டோனி முடிவு

ஐபிஎல் தொடரில் நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றாலும், 6 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளதால், பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். இனி அடுத்த ஐபிஎல் சீசன்தான்.

போட்டி முடிந்த பின்னர் பேசிய தோனி, ‘‘இது மிகவும் வித்தியாசமான ஒரு சீசனாக அமைந்துவிட்டது. நாங்கள் நிறைய தவறுகள் செய்துவிட்டோம். கடந்த நான்கு போட்டிகளில் நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை காட்டிவிட்டோம். எங்களுடைய வீரர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஏனெனில் 7-8 போட்டிகள் தோல்வி அடைந்திருப்பது மிகவும் நெருக்கடியானது. உங்களால் கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக விளையாட முடியாது.

எங்களது ஒட்டுமொத்த குரூப்பையும் மாற்ற வேண்டியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளை கணக்கில் கொண்டு மாற்றங்களை கொண்டு வரவேண்டும். எங்களுக்காக 10 ஆண்டுகள் விளையாடிய வீரர்களை கொண்டு ஐபிஎல் தொடரை தொடங்கினோம். அவர்கள் 10 வருடம் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார்கள். இனி, அடுத்த தலைமுறையிடம் அணியை கொடுக்க வேண்டியுள்ளது.

வலிமையுடன் மீண்டு வருவோம். அப்படி மீண்டு வருவதுதான் எங்களின் வழக்கம். நாங்கள் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறோம். இன்னும் இரண்டு புள்ளிகள் இருந்திருந்தால் ப்ளே ஆஃப்க்கு செல்ல வாய்ப்பாக இருந்திருக்கும். இந்த சீசனில்தான் ஒரே ஒரு டீம் சிறப்பாக விளையாடியுள்ளது. அல்லது பெரும்பாலான அணிகள் சிறப்பாக விளையாடியுள்ளது’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools