சாலை விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை! – 2 நாளில் 1½ லட்சம் வழக்குகள் பதிவு

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி கடந்த 14 மற்றும் 15-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் போலீசாரால் சுமார் 1½ லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

‘ஹெல்மெட்’ அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது மட்டும் 1.18 லட்சம் வழக்குகள் போடப்பட்டது. ‘சீட்’ பெல்ட் அணியாமல் கார் ஓட்டியவர்கள் மீது 36 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக டி.ஜி.பி. அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news