சார்மினார் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே வந்து கொண்டிருந்த சார்மினார் விரைவு ரெயில் இன்று காலை தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இந்த விரைவு ரெயில் தடம் புரண்ட விபத்தில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தடம் புரண்ட பெட்டியை மீட்கும் பணியில் ரெயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரெயில் விபத்து காரணமாக ஆங்காங்கே ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.