சாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’

கதிர், ஓவியா நடித்திருந்த `மதயானை கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கவிருக்கும் படத்திற்கு `இராவண கோட்டம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில், சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

வாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு செம என்று எனக்கு குறுந்தகவல் அனுப்பி விஜய் அண்ணா என்னை மெர்சலாக்கி விட்டார். உங்களது வாழ்த்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools