X

சாதி வெறி மண்ணோடு மண்ணாகட்டும் – இயக்குநர் சமுத்திரக்கனி ஆதங்கம்

நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை மற்றும் 9-ம் வகுப்பு படித்து வரும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகிய இருவரும், சக மாணவர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். சாதி வெறி மண்ணோடு மண்ணாகட்டும் என்ற வரியுடன் புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.