சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக அமைச்சரவை ஆலோசனைக்குப் பிறகு பேசுவேன் – முதலமைச்சர் சித்தராமையா
கர்நாடகா மாநிலத்தில் ஹெச். கந்தராஜு தலைமையில் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முந்தைய சித்தராமையாக ஆட்சிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை தொடங்கியது. கடந்த 2018ஆம் ஆண்டு இந்த பணி முடிவடைந்தது. பின்னர் கடந்த ஆண்டு 2024ஆம் ஆண்டு கே. ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் அறிக்கை தயார் செய்தது.
ஆனால் அறிக்கை இன்னும் வெளியிடாமல் உள்ளது. இந்த நிலையில் இன்று கர்நாடகா மாநில முதல்வரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வருகிற 17ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதன்பின் இது தொடர்பாக பேசுகிறேன் என்றார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் “சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக வருகிற 17ஆம் தேதி ஆலோசனை நடத்த அமைச்சரவை கூட்டப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். இந்த ஆலோசனைக்குப் பிறகு நான் இது தொடர்பாக பேசுவேன்” என்றார்.
கடந்த 11ஆம் தேதி சமூக-பொருளாதார மற்றும் கல்வி ஆய்வறிக்கையை கர்நாடக மாநில அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.