‘சாணிக்காயிதம்’ படத்தின் டீசர் வெளிய்யானது
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘என்.ஜி.கே.’
உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்பொழுது இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘சாணிக்காயிதம்’ படத்தில் செல்வராகவன் நடித்துமுடித்துள்ளார். இதில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்க்ரீன் சீன்
நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த வருடம் சாணிக்காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப்
பெற்றது.
இந்நிலையில், சாணிக்காயிதம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனுடம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. நேரடியாக ஓடிடி தளத்தில் மே 6 ஆம் தேதி சாணிக்காயிதம்
வெளியாகவுள்ளது. டீசரில் கீர்த்தி சுரேஷ் பேசும் வசனங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.