X

சவுதி அரேபியா இளவரசர் அரசு பயணமாக இன்று இந்தியா வருகிறார்!

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு, 2 நாள் பயணமாக சல்மான் இன்று இந்தியா வருகிறார்.

டெல்லியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.

பட்டத்து இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா-சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சதி கூறினார். சவுதி பட்டத்து இளவரசரிடம் பாகிஸ்தான் ஊக்குவிக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி இந்தியா எடுத்துரைக்கும் என்று தெரிகிறது.