சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய நபர் திடீரென பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் மீது சுடச் தொடங்கினார். பதிலுக்கு பாதுகாப்பு போலீசாரும் சுடத் தொடங்கினர்.
இந்தச் சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதலுக்கான நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதி பாதுகாப்புப்படை துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டு வீழ்த்தினர்.
இதனையொட்டி தூதரகம் மூடப்பட்டது. அமெரிக்கர்கள், அமெரிக்க ஸ்டாஃப்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உயிரிழந்தவர் நேபாளத்தை சேர்ந்தவர். அவர் தூதரக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.