பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கால்பந்து கிளப்புக்காக கடந்த 6 ஆண்டுகளாக விளையாடி வந்தார்.
இதற்கிடையே, நெய்மாரை தங்கள் அணியில் இணைக்க சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப் முயற்சி மேற்கொண்டது. அவரை விற்க பி.எஸ்.ஜி நிர்வாகமும் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, 2 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் அல்-ஹிலால் அணியில் இணைய நெய்மார் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு ரூ.908 கோடி ஊதியம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்பில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் நெய்மார் இன்று கையெழுத்திட்டார். ஏற்கனவே, சவுதி கிளப் அணியான அல்-நசர் என்ற அணியில் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.