Tamilசினிமா

சல்யூட் அடிக்காத போலீஸ் அதிகாரி மீது கோபமடைந்த நடிகர் சுரேஷ் கோபி

மலையாள நடிகரும், ராஜ்யசபா உறுப்பினருமான சுரேஷ் கோபி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஊருக்கு சென்றார். அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் மரங்களை வனத்துறையினர் அகற்றவில்லை என அப்பகுதி மக்கள் சுரேஷ் கோபியிடம் புகார் அளித்தனர்.

அவர் ஒல்லூர் காவல் நிலைய போலீஸ் சி.ஜே ஆண்டனியை அழைத்து இந்த புகாரை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி கவனிக்கும்படி கூறினார். அப்போது அந்த போலீஸ் அதிகாரி சுரேஷ் கோபிக்கு சல்யூட் அடிக்கவில்லை. இதை கவனித்த சுரேஷ் கோபி நான் ஒன்றும் மேயர் அல்ல பாராளுமன்ற உறுப்பினர் எனக்கு சல்யூட் அடிக்க மாட்டீர்களா? என்று கேட்டார். அதன்பின் அந்த போலீஸ் அதிகாரி அவருக்கு சல்யூட் அடித்தார்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் இதுகுறித்து விளக்கம் அளித்த சுரேஷ் கோபி சல்யூட் அடிக்க அந்த அதிகாரியை கட்டாயப்படுத்தவில்லை. அவரை சார் என்று மரியாதையுடன் தான் அழைத்தேன். நான் ஒரு எம்.பி, எனக்கு போலீசார் மரியாதை தர வேண்டும் என்பது ராஜ்யசபை செயலகம் கூறுகிறது. போலீசின் மரியாதை என்பது சல்யூட்தானே என்று கூறினார்.