சல்மான்கான் பட பெயரில் நடந்த மோசடி! – சீரியல் நடிகர் போலீசில் புகார்

பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக ஏற்கனவே நிறைய புகார்கள் வந்துள்ளன. தற்போது சின்னத்திரை நடிகர் ஒருவரிடமும் இதே பாணியில் மோசடி நடந்துள்ளது. அவரது பெயர் ஆன்ஸ் அரோரா. இவர் தன் ஹையான் உள்பட பல இந்தி சீரியல்களில் நடித்துள்ளார்.

மும்பையில் உள்ள லோகண்ட் வாலா பகுதியில் தங்கி, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். அவரை சுருதி என்ற பெண் அணுகி, பிரபுதேவா – சல்மான்கான் கூட்டணியில் உருவாகும் ஏக்தா டைகர் 3 படத்துக்கு நடிகர்-நடிகைகளை தேர்வு செய்யும் ஏஜெண்டாக பணியாற்றுவதாகவும், அந்த படத்தில் வில்லனாக நடிக்க உங்களுக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

பின்னர் பிரபுதேவாவை நீங்கள் நேரில் சந்திக்க வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதை கேட்டு ஆன்ஸ் அரோரா உற்சாகமடைந்துள்ளார். ஆனால் சல்மான்கான் தரப்பில் ஏக்தா டைகர் 3 படத்துக்கு நடிகர்-நடிகை தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இதற்காக ஏஜெண்டை யாரும் நியமிக்கவில்லை என்றும் அறிக்கை வெளியானது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆன்ஸ் அரோரா மும்பை ஓஷிவாரா போலீசில் புகார் அளித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools