சர்வாதிகாரி மோடி அரசு விவசாயிகளின் குரலை நசுக்கியுள்ளது – மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
டெல்லியை நோக்கி விவசாயிகள் நடத்தும் பேரணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு தவறி விட்டது. தலைநகருக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முள்வேலி, டிரோன்களில் இருந்து கண்ணீர் புகை, ஆணிகள் மற்றும் துப்பாக்கிகள் எல்லாம் ஏற்பாடு செய்துள்ளது.
சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரலை நசுக்கியுள்ளது. விவசாயிகளை எப்படி அவதூறு செய்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 750 விவசாயிகள் உயிரிழந்து இருந்தார்.
நாங்கய் யாருக்கும் பயப்பட மாட்டோம். தலைவணங்கவும் மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.