Tamilவிளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை போட்டி – இந்தியாவுக்கு 3 வெள்ளிப் பதக்கங்கள்

பல்கேரியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் அனாமிகா, அனுபமா மற்றும் கோவிந்த் ஆகியோர் வெள்ளி வென்று உள்ளனர்.

மகளிர் 81 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மாவிடம் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் அனுபமா தோல்வி கண்டார். 50 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனை ஹூ மெயி-யிடம் அனாமிகா தோல்வியைத் தழுவினார்.

இதேபோல், ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் சஹானி, உஸ்பெகிஸ்தான் வீரரிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி கண்டார்.