சர்வதேச கால்பந்து போட்டியில் புதிய சாதனை படைத்த ரொனால்டோ
யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் போர்ச்சுக்கல் அணி லியச்ட்டேன்ஸ்டீன் அணியை எதிர்கொண்டது. போர்ச்சுக்கலின் கேன்சலோபெர்னாடோ சில்வா தலா ஒரு கோலும், ரொனால்டோ மிரட்டலாக இரண்டு கோல்களும் அடித்தனர். லியச்ட்டேன்ஸ்டீன் அணியால் பதிலுக்கு ஒரு கோல் அடிக்க முடியாததால், போர்த்துக்கல் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் ரொனால்டோ புதிய வரலாற்று சாதனையைப் படைத்தார். அதாவது, ஆண்களுக்கான சர்வதேச கால்பந்து வரலாற்றில் 100 போட்டியில் கோல்கள் அடித்த முதல் வீரர் ரொனால்டோ ஆவார். முன்னதாக, கத்தார் உலகக்கோப்பையில் கோல் அடித்ததன் மூலம் ஐந்து உலகக்கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்திருந்தார்.