X

‘சர்தார்’ நாம் விவாதிக்காத ஒரு கதை – நடிகை ரெஜிஷா விஜயன்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘சர்தார்’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21-ம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படம் குறித்து நடிகை ரெஜிஷா விஜயன் கூறுகையில், “கர்ணன் படத்தின் ரிலீசுக்கு முன் வெளியான தட்டான் தட்டான் பாடலை கேட்ட பிறகு பி.எஸ்.மித்ரன் சார் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சர்தார் படத்தின் கதையை சொன்னார். அதை கேட்ட பிறகு அந்த கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்த கதை இப்போது வரைக்கும் நாம் விவாதிக்காத ஒரு கதை. அதே நேரம் ரொம்ப ஜாலியா, கமர்சியலா தியேட்டர்ல பார்க்குற மாதிரி படத்தை எடுத்து வைத்திருக்கிறோம். எனக்கு இதில் ரொம்ப முக்கியமான ஒரு கதாப்பாத்திரம். படத்தை அனைவரும் பாருங்கள்” என்றார்.