பழனி படம் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா என முன்னணி கதாநாயகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
காஜல் அகர்வால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான குயின் படத்தின் ரீமேக் இது. ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியானது.
அதில் நடிகை காஜல் அகர்வாலை ஒருவர் காதலிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பின்னர் காஜல் தனியாக பாரிசுக்கு ஹனிமூன் செல்கிறார். பாரிசில் அவர் செய்யும் அலப்பறைகள் காமெடியாக காட்டப்பட்டுள்ளன. மிகவும் ஆபாசமாக உள்ளது.
யூடியூப்பிற்கு சென்சார் கிடையாது என்பதால் இந்த காட்சியை பரபரப்புக்காக வைத்துள்ளார்கள். டீசரின் இறுதியில் ஆபாச வசனங்கள் இடம்பெற்றுள்ளன. டீசருக்கு சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.