Tamilசினிமா

சரவணன் நடிக்கும் ‘லெஜண்ட்’ படத்தின் புதிய பாடல் வெளியானது

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

அண்மையில் வெளியாகிய இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள போ..போ.. என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மதன் கார்க்கி வரிகளில் கே.கே பிரசாத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.