X

சம்பளத்தை உயர்த்திய நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’, நானிக்கு ஜோடியாக ‘தசரா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. நானி ஜோடியாக தசரா படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், இறுதியில் ரூ.3 கோடிக்கு உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய படங்களில் அவர் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடி வரை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.