ஸ்மார்ட்போன்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதில், சமூக வலைதளங்களில் நேரத்தை அதிகம் செலவிடுபவர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் அகர் மாவட்டத்தின் மகாரியா கிராமத்தை சேர்ந்த 80 வயதான பலுராம் பக்கிரி என்ற முதியவருக்கு மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த 34 வயதான ஷீலா இங்கிள் என்ற பெண்ணுடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சில நாட்களில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் மிகவும் அதிகமாக இருந்தது என்றாலும், அவர்கள் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக இருவரும் திருமணம் செய்து மண வாழ்க்கையில் இணைய முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அங்குள்ள கோர்ட்டு வளாகத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.