Tamilசெய்திகள்

சமூக வலைதளங்களில் சுதந்திரம் மிகவும் அவசியம் – சுந்தர் பிச்சை கருத்து

இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த விதிகளைப் பின்பற்றவேண்டிய நிலைக்கு கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை கூறியதாவது:

சமூக வலைதளங்களில் சுதந்திரம்  இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனினும், உலகெங்கிலும் உள்ள பல  நாடுகளில் இவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அந்த நாடுகளில் தகவல்களை வெளியிடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

வலுவான கட்டமைப்பு ஜனநாயக மரபுகள் மற்றும் மதிப்புகளைக் கொண்ட நாடுகள்  இணையத்தின் சிதைவுக்கு எதிராக நிற்க வேண்டும் என்றார்.