X

சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிக்கும் லட்சுமி!

2014-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘மிஸ் க்ரானி’. சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது.

இந்தியாவில் முதலில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதன் கதைப்படி வயதானவர் மற்றும் இளமையானவர் என்ற இரண்டு கதாபாத்திரங்களிலுமே சமந்தா நடிக்க திட்டமிட்டு இருந்தார். கணவனை இழந்த 74 வயதான பெண் ஒருத்தி, தான் குடும்பத்துக்குப் பாரமாக இருப்பதை உணர்கிறாள்.

ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு செல்லும் அவள், மந்திர சக்திகள் மூலம் 20 வயது பெண்ணின் தோற்றத்தைப் பெறுகிறாள். இதன்பிறகு ஏற்படும் சிக்கல்களை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் திரைக்கதையாக அமைத்திருப்பார்கள்.

2014ம் ஆண்டு தென்கொரியாவில் வெளியான இப்படம், 8.65 மில்லியன் டிக்கெட்டுகள் விற்று மாபெரும் வெற்றி பெற்றது. சமந்தாவுக்கு வெளிநாட்டு மேக்கப் நிபுணர்களை வரவழைத்து பாட்டி வேடத்துக்கான மேக்கப் போட்டு பார்த்துள்ளார்கள்.

ஆனால் அது சரியாக அமையவில்லை. எனவே கொரியன் படத்தில் செய்தது போல வயதான தோற்றத்துக்கு ஒரு நடிகையையும் இளமையான தோற்றத்துக்கு சமந்தாவையும் நடிக்க வைக்க போகிறார்கள். அந்த வயதான தோற்றத்தில் மூத்த நடிகை லட்சுமியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.