Tamilசினிமா

சமந்தாவின் யசோதா பட டீசர் 5 மொழிகளில் வெளியானது

நடிகை சமந்தா நடிப்பில் தற்போது ‘யசோதா’ என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘யசோதா’ படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் இன்று (09-09-2022) காலை 10.24-க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் சமந்தாவிற்கு வரும் இன்னல்களை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை கதைக்கருவாக வைத்து உருவாகியுள்ள இந்த டீசர் ஐந்து மொழிகளில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.