பாராளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
நெல்லை, விருதுநகர் தொகுதிகளில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி விரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் சரத்குமார் போட்டியிடுகிறாரா என்பது குறித்தும் நாளை நடைபெறும் கூட்டத்திற்குப் பின் தெரிய வரும்.
சமத்துவ மக்கள் கட்சி எத்தனை இடங்களில் போட்டி?, எங்கெல்லாம் போட்டி? என்பதை சரத்குமார் நாளை அறிவிக்க உள்ளார்.