Tamilசெய்திகள்

சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சபரிமலை கோவில் சிறப்பு தரிசனத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

* கொல்லம்-காக்கிநாடா (வண்டி எண்:07212) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 17, 21, 25-ந்தேதி காலை 10 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* கொல்லம்-ஐதராபாத் (07110) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 23, 27-ந்தேதி, டிசம்பர் மாதம் 1-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* கொல்லம்-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்(06062) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30-ந்தேதிகளில் மதியம் 3 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* எம்.ஜி.ஆர். சென்டிரல்-கொல்லம்(06063) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 17, 24-ந்தேதி மாலை 4.15 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக கொல்லம்-எம்.ஜி.ஆர். சென்டிரல்(06064) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 18, 25-ந்தேதி மதியம் 3 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* எம்.ஜி.ஆர்.சென்டிரல்-கொல்லம்(06065) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்

* எம்.ஜி.ஆர். சென்டிரல்-திருவனந்தபுரம்(06047) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 21, 28-ந்தேதி இரவு 7 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* கோவை-சந்திரகாச்சி(80824) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி இரவு 9.45 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *