சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரை இறங்கும் பணி இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கும் – இஸ்ரோ தகவல்

சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று மதியம் இஸ்ரோ வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது:-

தானியங்கி தரை இறங்கும் வரிசையை தொடங்க அனைத்தும் தயாராக உள்ளது. நிலவில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் லேண்டர் தரை இறங்கும் பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும். இந்த பணி தொடங்கியவுடன் விஞ்ஞானிகள் குழு கட்டளைகளை வரிசையாக செயல்படுத்துவதை உறுதி செய்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது.

விக்ரம் லேண்டர் எப்படி தரை இறங்கும்? அடுத்து என்ன நடக்கும்? என்பது கடைசி 7 நிமிடத்தில் தெரியும். இதை “7 மினிட்ஸ் ஆப் டெரர்” என்று அழைக்கிறார்கள். ஏன் என்றால் இந்த 7 நிமிடங்கள் என்பது விக்ரம் லேண்டர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நிலவின் மேற்பரப்பில் மிதக்கும். அந்த சமயத்தில் லேண்டர் முழுவதும் அதில் உள்ள சென்சார்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் செயல்படும். அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகளும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news