‘சந்திராயன் 3’ விண்கலம் நிலவில் தரையிறங்குவதை நேரலை கண்டுகளித்த இந்திய கிரிக்கெட் அணியினர்
சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.
இந்த ‘லேண்டர்’, இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர். அதன்படி லேண்டரை தரையிறக்கும் ஒவ்வொரு நொடியும் பரபரத்தது. இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
இந்த காட்சியை அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரலை பார்த்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.