‘சந்திரமுகி 2’ படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொள்ளும் வடிவேலு – வைரலாகும் வீடியோ

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘சந்திரமுகி -2’ படத்தில் வடிவேலுவின் டப்பிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சந்திரமுகி பத்து பாகம் வந்தாலும் சந்திரமுகியின் பெஸ்ட் பிரண்டு நான்தான் என்று வடிவேலு கூறும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema