Tamilசெய்திகள்

சந்திரசேகரராவின் கட்சியில் இருந்து விலகிய 9 பேர் பா.ஜ.கவில் போட்டி

தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் இதுவரை 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க அறிவித்துள்ளது. இதில் 9 பேர் சந்திரசேகரராவின் பி.ஆர். எஸ். கட்சியில் இருந்து சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தவர்கள். வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியதால் தெலுங்கானா மாநில பா.ஜ.கவில் சலசலப்பு ஏற்பட்டது.

கடந்த வாரம் ஐதராபாத் வந்திருந்த அமித்ஷாவிடம் இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இப்போதைக்கு அதிக இடங்களில் வெல்ல ஒன்றினைந்து வேலை செய்ய வேண்டும் என்று அவர் கண்டிப்பாக கூறியுள்ளார். இதனால் தேர்தல் வேலைகளில் பா.ஜ.க.வினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.