Tamilசினிமா

சந்தானத்தின் ‘குலு குலு’ படம் விரைவில் ரிலீஸ்

‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ‘குலு குலு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இதனை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார்.

‘குலு குலு’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இப்படம் ஜுன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.