சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இப்படத்திற்கு ‘பிரின்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘பிரின்ஸ்’ படத்தை உலகமெங்கும் திரையரங்குகளில் தீபாவளி தினத்தன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை ஒரு வீடியோ பதிவின் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்தின் ரிலீஸுக்கு சத்யராஜ் சார் தான் காரணம் என்று நகைச்சுவையாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.