சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து அவர்களை அமைதிப்பாதையில் திருப்புவதற்காக, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்பலனாக அப்பகுதியில் வாழும் நக்சலைட்டுகள் தொடர்ந்து சரண் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் சுக்மா மாவட்டம் பஸ்தார் பிராந்தியத்தில் 9 நக்சலைட்டுகள் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் முன்பு சரண் அடைந்தனர். சரணடைந்தவர்களில் ஒருவரின் தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சரணடைந்தவர்களில் 2 பெண்களும் அடங்குவர். அவர்கள் ஏராளமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.