சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படும்.
* பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உத்தரவிட்டது ஜெயலலிதா ஆட்சிதான்.
* முழுமையான மதிப்பீடு செய்துள்ளதால் சேதமடைந்த அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும்.
* தன் உயிரை பொருட்படுத்தாமல், மக்களோடு மக்களாக இருப்பவரே தலைவர்.
* 8 மாதங்களாக வெளியே வராத ஸ்டாலின், தற்போது ஓட்டுக்காக களம் இறங்கியுள்ளார்.
* கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.