Tamilவிளையாட்டு

சஞ்சு சாம்சன், பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோரை தக்க வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடக்கும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ஆமதாபாத், லக்னோ ஆகிய அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் வீரர்கள் முதலில் இருந்து ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ஒவ்வொரு அணியும் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தலா நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

அந்த வகையில், ராஜஸ்தான் ராயலஸ் அணி சஞ்சு சாம்சன் (ரூ.14 கோடி), ஜாஸ் பட்லர் (ரூ.10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ. 4.கோடி) ஆகிய 3 பேரை தக்கவைத்துள்ளது. ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ.62 கோடி நிதி உள்ளது.