சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கும் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணி
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை மையப்படுத்தி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஆல் ஸ்டார் உலகக்கோப்பை லெவன் அணியை வெளியிட்டுள்ளார்.
இதில் ஐந்து இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆனால் விக்கெட் கீப்பரான எம்எஸ் டோனிக்கு இடம் கிடைக்கவில்லை.
சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்துள்ள ஆல் டைம் உலகக்கோப்பை லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா, 2. பேர்ஸ்டோவ், 3. கேன் வில்லியம்சன், 4. விராட் கோலி, 5. ஷாகிப் அல் ஹசன், 6. பென் ஸ்டோக்ஸ், 7. ஹர்திக் பாண்டியா, 8. ஜடேஜா, 9. மிட்செல் ஸ்டார்க், 10. பும்ரா, 11. ஜாப்ரா ஆர்சர்.